Monday, August 13, 2012

காதலியே நீதான் என்இதயத்தின் நிழலாகஇருக்கிறாய் !

பூக்களிடாத ஓசையை உன்இமைகளில் கண்டேன் வானவில் காணாத வண்ணத்தை உந்தன்விழிகளில் கண்டுகொண்டேன் தென்றலோடு உல்லாசமாக இருக்கும் மலர்கள் கூட உன்மூச்சுகாற்றை தேடி வந்ததை பார்த்தேன் ! அலைகடல் அலைந்தது உன்பாதங்களின் நிழலைதேடி! நிலவும் நின்றுபோனது உன்அழகை கண்டு ! காற்றும்-உன்காலடியில் சரணடைந்தது உன்தேகத்தில் கலந்துகொள்ள மழைத்துளியும் உன்கன்னத்தை பார்த்து சென்றது உன்னில் நனைந்து செல்ல ! என்நெஞ்சில் விதைத்தேன் உன்னை உன்இதயத்தில் புதைத்தேன் என்னை காதலியே உனக்கு என்இதயத்தால் நிலவின் நிழலையே பிடித்துதருவேன் காதலியே -நீ என்இதயத்தின் நிழலாக இருக்கும்வரை ! எழுதியவர் :தூ.சிவபாலன்,கட்டுமாவடி

Saturday, January 14, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Wednesday, June 1, 2011

சுற்றுலா ஓர் பார்வை


வேடந்தாங்கல்:
இந்தியாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்னையிலிருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மிகப்பெரிய பூங்காவும், எழில் சூழ்ந்த ஏரியும் இவ்விடத்தின் சிறப்பம்சமாகும். இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்களுக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும். திரும்பிய பக்கமெல்லாம் பறவைகளின் குரல் கேட்கும். இவ்விடம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுளா பயணிகளை கவரும் பெரும் சுற்றுலா தளம் ஆகும்.

கூந்தங்குளம்:
தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றான கூந்தங்குளம் சரணாலயம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இங்கு வெளிநாட்டு பறவைகளான கூழக்கடா, ஒயிட் ஐபிஸ், செங்கால் நாரை உள்ளிட்ட பல பறவைகள் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் தை அமாவாவாசையில் இங்கு கூடு கட்டும் பறவைகள் ஆடி அமாவாசை வரையிலும் தங்கி இங்கேயே குஞ்சு பொரித்து பின்னர் குஞ்சு பறவைகளை அழைத்து கொண்டு செல்கின்றன. இங்கு அடிக்கடி பஸ் செல்வதில்லை. சொந்த வாகனத்தில் சென்றால் சிறப்பாக இருக்கும்.

திருச்செந்தூர்:
கடற்கரையில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இங்கு வள்ளி தவமிருந்த குகை மிகவும் சிறப்பாகும். இந்த கோவிலில் "நாழி" தீர்த்தத்தில் நீராடி முருகனை தரிசிக்கலாம். இங்கு தங்குவதற்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் குறைந்த வாடகைக்கு கிடைக்கும். கோவிலில் பூஜைகள், கட்டணங்கள் பற்றிய விவரங்கள் அறியவும், தேவஸ்தானம் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யவும் 04639-242271 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு செல்வதற்கு மதுரையிலிருந்து நிறைய பஸ்கள் கோவில் வாசலுக்கே செல்கின்றன.

Wednesday, May 11, 2011

சாதி மதங்களை ஒழித்திடு மனிதா !!!


மனிதராய் பிறந்த நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். என்னால் இயன்ற அளவு நான் கூறுகிறேன். உலகில் உள்ள மக்கள் அனைவரும் நம் உறவினர்களே என்பதை நாம் கருத்திள் கொள்ள வேண்டும். உலகிலேயே அதிக அளவு சாதிமத வேறுபாடு கொண்டது இந்தியா தான். இருந்த போதிலும் இங்கு தான் அதிக அளவு ஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர். உலகிள் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தால் முதலில் கண்ணீர் விடுவது இந்தியர்களே. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்தல் வேண்டும்

தொண்டை கரகரப்பா ?

பலர் தொண்டை கரகரப்பினால் அவதிபடுகின்றனர். இவற்றை தடுக்க நான்கு அல்லது ஐந்து மிளகினை எடுத்து அதில் ஐந்து அல்லது ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு அதை நான்கு டம்ளர் அளவிற்கு வரும்வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பிறகு நன்கு ஆறியபின் நான்கு முறை குடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதனால் ஒரெ நாளில் சரியாகிவிடும். முக்கியமாக இவற்றை ஆரம்பத்திலேயே செய்ய வேண்டும்

Tuesday, May 10, 2011

மொபைல் போன் மென்பொருட்களுக்கான இணையதளங்கள்


பெரும்பாலும் அனைவரும் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். அவற்றின் பயன்பாடுகளை அதிகப்படுத்த பல வகையான மென்பொருட்கள் உள்ளன. அவற்றை நாம் இணையதளங்களில் எளிதாக பெரலாம். பின்வரும் இணையதளங்களில் தரவிரக்கிக் கொள்ளலாம்.

1.www.getjar.com
2.www.mobile9.com
3.www.mobango.com

இந்த இணையதளங்கள் மிகவும் அதிக அளவிலான மென்பொருட்களை கொண்டுள்ளன.